Monday, May 18, 2015
Thursday, May 14, 2015
Tuesday, October 28, 2014
Friday, October 2, 2009
அந்த வி.ஐ.பி!
சென்னை எழும்பூர் ரயில் நிலையம்...
பிரிட்டிஷாரின் கட்டிடக் கலைக்கு சான்று சொல்லும் அடையாளங்களில் ஒன்று...
ரயில் நிலையம் ஒரு பிரம்மாண்டம்தான்!
பலதரப்பட்ட மனிதர்கள்,பலதரப்பட்ட மொழிகள்,ரயில் வந்து செல்லும் ஓசை,ரயில் நிலையத்திற்கேயுரிய வாசனை,நீண்டு நெடிந்திருக்கும் ரயில் பெட்டிகள்,எல்லாவற்றிர்க்கும் மேலாக அழுகையாய்,ஆனந்தக் கண்ணீராய்,பிரியா விடையாய்,பிரிய மறுக்கும் இடமாய் என ஒட்டுமொத்தமாய் உணர்வுகளைக் குவித்து பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தும் ரயில் நிலையம் ஒர் பிரம்மாண்டம்தான்...
இந்த பிரம்மாண்டத்தை நான் எப்பொழுதெல்லாம் காண நேர்கிறதோ, அதுவும் சொந்த ஊரில் தாயின் பராமரிப்பில் சில நாட்கள் இருந்துவிட்டு எப்பொழுதெல்லாம் எழும்பூர் ரயில் நிலையம் வரநேர்கிறதோ அப்பொழுதெலாம் என்னுள் ஓர் பயம் ஒட்டிக்கொள்ளும்....
இங்கே உன் தாய் இல்லை,தந்தை இல்லை,உற்றார் உறவினர்கள் இல்லை,கண்டிப்பாய் சுதந்திரம் இல்லை என உறக்கசொல்வது போல் இருக்கும் எழும்பூர் ரயில் நிலையத்தை நான் பார்க்கும் பொழுதுகள்....
சுற்றுலாத் தவிர்த்து,பணி நிமித்தம் நெடுந்தொலைவில் இங்கு வந்து தடம் பதிக்கும் பெரும்பாலோரின் பொழுதுகள்,குறிப்பாக இளைஞர்களின் பொழுதுகள் இப்படித்தானிருக்குமென நினைக்கிறேன்...
தாய் வீடு என்பது உண்மையில் பெரும் பாதுகாப்பு, அதுவும் நெடுந்தூரத்தில் இருந்து வேலைபார்க்கும் இளைஞர்களுக்கு தாய் வீடு செல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அளப்பரியது...
உண்மையில் விவரம் எதுவுமே தெரியாமல் கருவறையில் இருக்கும் பாதுகாப்பை விடவும்,விவரம் தெரிந்தபிறகு தாயின் மடியில் அவ்ர்தம் பார்வைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் பாதுகாப்பு மிக உயர்ந்தது...
உலகையே உருட்டி உண்ணக் கொடுத்தாலும் தாயின் ஒற்றைப் பருக்கைக்கு ஈடாகுமா? ஒற்றை உருண்டையில் உயிரை நீட்டிக்கும் பக்குவத்தை பக்கத்திலிருந்து கலந்து கொடுப்பவள் அல்லவா தாய்!
அத்தகையத் தாயை,தாய் மண்ணைப் பிரிந்து பல்வேறு கனவுகளோடு,இதே எழும்பூர் ரயில் நிலையத்தில் தடம் பதித்தவர்தான் இன்று நான் பார்த்த அந்த வி.ஐ.பி,....
ஆங்கில இலக்கியம் முடிந்த கையோடும், அடுத்த நிலைக்கான கேள்விகளோடும் சென்னையைத் தஞ்சம் அடைத்தவருக்கு வாய்ப்பளித்தது ஒரு சுற்றுலா ஏஜென்சி, சிறப்பான ஆங்கிலப் புலமை,நேர்த்தியான நடை,உடை,பாவனை,ஆளுமை என அனைத்தும் அவரை சிறந்த tourist guide ஆக மக்களிடையே அடையாளப் படுத்தியது,
வேலைக்குத் தகுந்த ஊதியம்,தேவைக்குத் தகுந்த மனைவி, ஆஸ்தி -அஸ்தி கரைப்பதற்காவே இரு குழந்தைகள், என அவரது சென்னை வாழ்க்கை சந்தோசமாய் நகர்ந்தது..
மகனையும் மகளையும் மேல்நிலைக் கல்வி படிக்க வைக்கும் வரை அவருக்கு வேலை பறி போகவில்லைதான்... ஆனால் அதற்கு பிறகு வேலை பறிபோனது.
அந்த கணமே மனைவிக்கு அவ்ர்மீதிருந்த மரியாதையும் போனது.
கிராமத்து அக வாழ்க்கையைக்காட்டிலும் பெரு நகரத்து புற வாழ்க்கையப் பார்த்து பழகியிருப்பார் போலும் அவ்ரது மனைவி..ஒவ்வொரு நாளும் அவ்ரை வெறுத்து ஒதுக்கியிறாள்,
குழந்தைகளும் தாய் சொல்லிற்கு மறுப்பேதும் சொல்லாது தந்தையை தவிர்த்திருக்கிறார்கள்..
வேலையின்மை,மனைவியின் போக்கு,குழந்தையின் கண்டு கொள்ளாமை என எல்லாம் சேர்ந்து அவரை ஒருவித மனச்சிக்கலுக்கு,உளவியல் பாதிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறது.
மனைவியின் இரக்கமில்லா சப்தத்தில் ஓர் நாள் அவர் வீட்டைவிட்டே வெளியேறிவிட்டார்..
வீதிகள் இவர்களுக்காகத்தானேக் காத்திருக்கிறது பிறகென்ன?
நொந்த இதயத்தோடும் ,நொடிந்து போன வாழ்க்கையோடும் நடை போட்டிருக்கிறார்..
மனைவி, குழந்தைகளைப் பிரிந்து 15 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது இப்பொழுது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது கூட அவருக்குத் தெரியாது..
அவர்களுக்கும் இவர் எங்கிருக்கிறார் எனும் எண்ணம் துளியளவேனும் கிடையாது போலும் 15 வருடங்களாக அவர் சார்ந்த ஒருவரும் அவரை சந்திக்க வரவில்லை....
இந்த 15 வருடம் அவர் வாழ்க்கையை எப்படி நகர்த்தியிருப்பார் என்னும் போது என் விழிகள் கலங்கிற்று..
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் எதிர்புறமாக அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில்தான் அந்த வி.ஐ.பி யின் வரலாறு கேட்க நேரிட்டது...
நீண்டு வளர்ந்திருக்கும் வெள்ளைத் தலை முடி, அடர்த்தியான மீசை, சவரம் செய்யப்படாமல் அவரின் அக வாழ்வோடு அவரின் காலத்தின் மதிப்பீட்டையும் சொல்லும் விதமாக வளர்ந்து விரிந்திருக்கும் வெண்தாடி,
முன்பு வெள்ளை நிறத்தில் இருந்திருக்கும் போலும் தற்பொழுது புற உலகின் யதார்த்தம் பூசியிருக்கும் சட்டை, அதை உட்புகுத்தி வெளிரியிருக்கும் பெல்ட், அடர் நீல வர்ணத்தில் பேன்ட், இடது தோள்பட்டையில் ஒரு அழுக்கு மூட்டை, ஒளிவீசும் கண்கள், குழந்தைத் தனமானப் புன்னகை என ஒரு ஞானியைப் போல என் எண்ணங்களில் ஊன்ற ஆரம்பித்தார்...
யாசகம் செய்யும் எத்தனையோ பேரை தினமும் நாம் சந்திக்கிறோம் முடிந்தால் தர்மம் செய்கிறோம் இல்லையேல் "சில்ற இல்லப்பா என தவிர்த்து ஒதுங்குவோம்
ஆனால் இவரோ சுருங்கிய முகமோ, ஏக்கமோ, யாசக வாசகமோ எதுவுமே இல்லாது நேராக நின்று, இரு கரங்களையும் கூப்பி என்னைப் பார்த்து கும்பிட்டு சினேகமான ஒரு புன்னகையை உதிர்த்தார், நானும் பதிலுக்கு புன்னகைத்தேன் மீண்டும் கைகளைக் கூப்பினார்..அதற்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை ஒரு 50 பைசாவை அவரிடம் கொடுத்தேன்....
அதைப் பெற்றுக் கொண்டதும் மீண்டும் இருகரங்களையும் தலைக்குமேல் உயர்த்தி கைகூப்பியவர் சில கும்பிடலுக்குப் பிறகே நகர்ந்தார்...
இடை இடையே குழந்தை தன் தாயிடம் எதேதோ சொல்லிக்கொண்டிருக்குமே அத்தகையதொரு மொழியில் யாரிடமோ,என்னென்னவோ சொல்லிக்கொண்டேயிருக்கிறார்....
ஒரு வேளை தொலைந்து போன மனித நேயம் அவரது விழிகளுக்கு மட்டுமேத் தெரிகிறதோ என்னவோ?
நான் அவரை முழுதுமாக அவதனித்தேன் .....
என்னருகே சக பயணி ஒருவர் இன்னொருவரிடம் கோயம்பேடு செல்வதற்கான பேருந்து வசதி பற்றி கேட்கிறார் அதை உன்னிப்பாய் கவனித்த அவர், அவர்களருகே ஓடிவந்து தெளிவாய் பேருந்து நிறுத்தம், வழித்தடம் குறித்து பேசிவிட்டு நகர்கிறார்.....
ஓர் வயதான அம்மா ஓடிவருகிறார் அந்த மூதாட்டிக்காகப் பேருந்தை மறைத்து பத்திரமாக போங்கம்மா என்பது போல் சைகை காட்டுகிறார்..
என் சிந்தனை முழுதும் அவர் மீதே பதிந்திருந்தது..அவரிடம் பேசவேண்டும் போலிருந்தது எனக்கு..இருப்பினும் கொஞ்சம் பயந்த படியே இருந்தேன்..
மீண்டும் அவர் என்னருகே வரவே ஐயா உங்ககூட கொஞ்சம் பேசனுமே என்றேன்....எங்கிட்ட என்ன சார் பேசப் போறீங்க என்றார்,
எதோ பேச வேண்டும் போல் தோன்றுகிறது என்றேன்..
நான் ஒரு பரதேசி என்றார்....
உங்கள் பெயர் என்ன என்றேன்?
ஒருகணம் என்னை உற்றுப் பார்த்துவிட்டு
ராஜ திருஞான சம்பந்தம் என்றார்..
அழகான பெயர் ஞானம் உங்கள் பெயரோடு மட்டுமல்ல உங்களிடமும் சம்பந்தப்பட்டுள்ளது என்றேன்..
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஆனால் நான் அதைக் கடந்து விட்டதாய் உணர்கிறேன் என்றார்...
தியானம் செய்வீர்களா என்றேன்,,,
தியானம் போன்றது என் வாழ்வு என்றார்...
உங்க ஊர் ஐயா?
தஞ்சா ஊருக்கு அருகில்...
சார் 1978ல நா இங்கே வந்தேன் ..பி ஏ ஆங்கில இலக்கியம் முடித்து இங்கே வந்து...என தனது வாழ்க்கைப் பதிவுகளை என்னிடம் பகிர்ந்து
கொண்டவரிடம்
ஐயா புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டா?என்றேன்
YOU KNOW IAM A BOOK WARM!
நா நிறைய புத்தகங்கள் படிச்சிருக்கேன்....
சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறார்...
ஐயா இவ்வளவு படிச்சிருக்கீங்க மீண்டும் ஏதேனும் வேலையில் சேர்ந்திருக்கலாமே என்றேன்..
சில கம்பேனிகளுக்கு முயன்றேன் பலனில்லை பிறகு இந்த வாழ்க்கை எனக்குப் பழகி நிரந்தரமாயிற்று என்றார்..
ஏதேதோ சைகை காட்டி சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே அப்படி என்னதான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்றேன்..
அது.....!உங்கள மாதிரி காசு கொடுக்குறவங்களை thanks சொல்லி வாழ்த்துவேன்....என்னையறியாமல் அவர் இவ்வளவு கொடுத்தாரு ,இவர் அவ்வளவு கொடுத்தாருன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன்....
எப்பவுமே வீதிகளில்தான் தங்குவீர்களா என்றேன்..
அப்படித்தான் தங்கியிருந்தேன் ஆனால் உங்களைப் போல் ஒருத்தர் ஒருநாள் எங்கிட்ட பேசினாரு அவருதான் அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே இரவுமட்டும் தங்க அனுமதி கொடுத்திருக்காரு அங்கதான் தங்குவேன் என்றார்..
10 நாளைக்கு ஒரு முறை குளிப்பேன்,
காலையில் சாப்பிட மாட்டேன்,
மதியம் கொஞ்சமா சாப்பிடுவேன், இரவு நினைத்தால் சாப்பிடுவேன் இல்லையேல் விட்டு விடுவேன்...என்றார்
சரி வாங்க ஐயா நாம ரெண்டுபேரும் சாப்பிடலாம் என அழைத்தேன்..
இல்ல சார் வேணாம் சார் காலையில சாப்டமாட்டேன் என்றார்..
எனக்காக வாங்க என்றேன்..
இல்ல நீங்க பேசினது சந்தோசம் என்றார்...
சரி வாங்க 100 ரூபாயா எங்கிட்ட இருக்கு சில்லறை மாத்திக் கொடுக்கிறேன் என்றேன் மறுத்துவிட்டார்...(நான் வளர்ந்து வரும் சினிமா நடிகன் எனது பொருளாதார்ம் அன்று 100 ரூபாய்க்கு உட்பட்டே இருந்தது)
பிறகு என்னிடம் இருந்த சில்லறைகளை மொத்தமாய் அவரிடம் கொடுக்கமுற்பட்டேன் முதலில் வாங்க மறுத்தவர் பிறகு வாங்கிக் கொண்டார்...
மீண்டும் ஒருமுறை கைதூக்கி கும்பிட்டு உளர ஆரம்பித்தார் நான் அவரை உணர ஆரம்பித்தேன்....
பெரும்பாலான ஞானிகளை இந்த உலகம் பைத்தியக்காரர்களாய்த்தான் பார்க்கிறது..ஆனால் ஓசோ போன்றவர்கள் பைத்தியத்தனம்தான் ஞானிகளின் அடையாளம் என்கிறார்கள்....
உலகைத் துறந்தவன் துறவி உலகை உணர்ந்தவன் ஞானி...
புற மதிப்பீடுகளுக்கு மட்டுமே பழக்கப்பட்டுவரும் இவ்வுலகத்தால் அகம் சார்ந்த அளவீடுகளை அறிய முடியவில்லை.....
புறம் என்பது வெறும் மாயைதான் என்பதைக்கூடபுறம் நம்மை ஒதுக்கித்தள்ளும் பொழுதுகள்தான் உணர்த்துகிறது...
புறத்தை அழகுபடுத்தத் தெரிந்த நமக்கு அகத்தை அழகுபடுத்த தெரியவில்லை....
அல்லது அகம் என்பதையே அறியவில்லை.....
மனிதம் சுறுங்கி மானுடத்துயர் அதிகரிக்கும் நாட்களில் கடவுள் அவதரிப்பார் என்கிறார்கள்...
கடவுள் அல்ல புற மதிப்பீடுகளால் ஒதுக்கப்பட்ட நம் வி.ஐ.பி திரு ரஜ திருஞானம் ஐயா போன்று பல மகான்கள் அவதரிக்கக்கூடும்...அன்று புறம் முற்றிலுமாய் தன் சுயத்தை இழக்கும்.....
(தினமும் காலையில் 7 மணிமுதல் 10 மணிவரை அவரை எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பாக பார்க்காலாமாம்...நானும் அவரை இன்னொரு முறை சந்திப்பேன்....)
Sunday, August 23, 2009
போதி
அவனது கடைசி இரவு அது, அதோ காத்திருக்கிறதே ஒரு விஷ பாட்டில் அது அவனுக்காகத்தான்...
இன்னும் சிறிது நேரத்தில் அவன் மரிக்கக் கூடும்,அது நடந்தே தீரும்...
பாவம் நீந்தியே பழக்கம் இல்லாதவனுக்கு ,எதிர் நீச்சல் எப்படி சாத்தியமாகும்? காணும் இடமெல்லாம் இருளே சூழ்ந்து கிடப்பதாலும்,அப்படித்தான் அவன் நம்புவதாலும் வெளிச்சம் விரிக்க வேண்டிய வயதில் விதியை சுருக்க முற்படுகிறான்.
இன்னும் சிறிது நேரத்தில் மரணத்தை நிகழ்த்தியே தீருவேன் என்றபடி இருக்கிறது விஷப் பாட்டில் மீது விரவியிருக்கும் அவ்னது பார்வை...
இருப்பினும் தன் மரணத்தின் ஒவ்வொரு நொடியையும் கவனமாய் செலவழிக்கிறான்,
அதோ ஒரு நொடி திடீரென மழைத்துளிகளைப் பிரசவித்து அவனது மரணத்தை பல நொடிகள் ஒத்திவைக்க செய்கிறது,.எத்தனையோ தடவை மழை பார்த்திருக்கிறான்..ஆனால் இன்று மட்டும் ஏனோ அவனுக்குள் அப்படியோர் தவிப்பு.,மழை வரும் பொழுதுகளை எல்லாம் அவன் விடும் கண்ணீர் பொழுதுகளாய் ஆக்கியதின் விளைவு அது.
தன் மரணுத்துக்கு முந்திய கடைசி நொடிகளில் அவந்தான் கேட்கிறான்,மழை இத்தனை அழகானதா?முதன் முதலாய் வியக்க ஆரம்பிக்கிறான்...பாவம்! ரசிப்பதற்கும் சிந்திப்பதற்கும் தெரிந்திருந்தால் அவன் ஏன் விஷப்பாட்டில் எடுத்திருக்க வேண்டும்?ஒட்டுமொத்த உலகத்தையும் இன்றுதான் உற்று நோக்குகிறான் அல்லது உணர்கிறான்..
நீண்டு நெடிந்திருக்கும் அந்த நகரத்து வீதியில் அவனது விழிகள் விரிகிறது, அதோ! வற்றிப்போன மார்பை சுவைத்துக்கொண்டிருக்கும் ஓர் platform தாயின் குழந்தை என்னமாய் சிரிக்கிறது?
அட! என் வயதை ஒத்தவர்கள்தான் இந்த குப்பை அள்ளுபவர்கள் கும்மியடித்துக்கொண்டே எத்தனை அழகாய் குப்பை அகற்றுகிறார்கள்?
அதோ கூர்கா தயாராகிறான் பாஷை தெரியா பாடலை முனுமுனுத்துக்கொண்டே,பாஷை தெரியாவிடினும் அவ்ன் சந்தோசம் என்னையும் அல்லவா ஏங்க வைக்கிறது?
இரவு இத்தனை ரம்மியமானதா?ஒளிர்ந்து கிடக்கும் விளக்குகளையும்,தெளிந்து கிடக்கும் வானத்தையும் நோக்குகிறான்,வெளிச்சம் இருக்கத்தானே செய்கிறது என்பது போல் மனதைக் கேட்கிறான்...
விஷப்பாட்டில் ஏமாற்றிவிடுவானோ என்னுமொரு கோணத்தில் அவனை பயமுறுத்துகிறது அல்லது மீண்டும் அவனது மரண நொடிகளை ஞாபகப் படுத்திற்று...
தன் தாயை நினைத்துப் பார்க்கிறான்..அம்மா...அம்மா...அம்மா....உன் தாலியை விடுத்து எனக்கு கல்வியைக் கொடுத்தாய்,உன் காய்ந்த வயிறுக்கு நான் ஏதம்மா கொடுத்தேன்?
நான் என்ன செய்வேன்?என்னால் முடியாது போயிற்றே நான் இருந்தும் என்ன பயன்?
இதோ!உன் மகன் இறக்கப் போகிறேன் ஒட்டு மொத்தமாய் ஒரு நிம்மதிக்காக இறக்கப் போகிறேன்.
நினைத்து நினைத்து நெஞ்சம் குமுறுகிறான்...அவனது இயலாமை மீண்டும் இயங்கத்தொடங்கிற்று...ஆவேசம் வந்தவனாய் விஷப்பாட்டில் எடுக்கிறான்,கண்ணைமூடி ஒரே மடக்கில் குடித்துவிட ஆயத்தமாகிறான்.....கண்களை மூடுகிறான் ,முடியவில்லை கை நடுங்கிற்று,அம்மாவின் முகம் வந்து வந்து போகிறது..... அம்மா..அம்மா....அம்மா...அழத்தொடங்குகிறான்...அம்மாவின் குரலையாவது கேட்டுவிடமாட்டோமா என அவசியப்படுகிறான்.......சில நொடிகள் தள்ளிப் போகிறது...
விஷப்பாட்டில் மட்டும் Waiting.....
அம்மாவைப் பற்றிய தாகம் அதிகரிக்க,அதிகரிக்க.....அவசர அவசரமாக ஓர் தொலைபேசி நிலையத்தை அடைகிறான்....எண்களை சுழற்றுகிறான்,பக்கத்து வீட்டு அக்காவிடம் சொல்லி அம்மாவை அழைத்துவர சொல்கிறான்,சிறிது நேரத்திலேயே எய்யா ராசா எனும் ஏக்கத்தோடு எதிர்முனையில் அம்மாவின் குரல்...
கேட்ட மாத்திரத்திலேயே அவன் நெஞ்சு அடைக்கிறது,விழிகள் வெடிக்கிறது...
எதிர் முனையில் மட்டும் ஒரு ஏக்கத்தவிப்பு விட்டு விட்டு ஒலிக்கிறது....
பேச நா எழவில்லை...ரிசீவரை வைத்துவிட்டு விம்மியபடியே கடைகாரரை நெருங்குகிறான்...
கடை காரரும் வருந்தியபடியே ,என்ன சார்?ஏன் சார் அழுறீங்க?கவல படாதீங்க சார் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்...உங்க கண்ணீரை நான் உணர்கிறேன் அழாதீங்க சார் அழாதீங்க என்கிறார்...
யோ! கண்ணுனு இருந்தா அழுக வரத்தான் செய்யும்,அதுலான் உனக்கு இப்ப எதுக்கு இந்தா என 10 ரூபா நோட்டை எரிச்சலோடு நீட்டுகிறான்,
கடைகாரர் அதை நிதானமாக வாங்கி விரல்களால் விட்டமளக்கிறார்...
என்ன சார்? நல்ல நோட்டா கள்ள நோட்டானு பாக்குறீங்களா?நல்ல நோட்டுதான் என மீண்டும் எரிந்துவிழுகிறான்...
சற்று நிதானத்துடன் கடை காரர் தொடர்கிறார் ஏன் சார்? ஏன் எதுக்கெடுத்தாலும் விரக்தியில பேசுறீங்க?நீங்க கொடுக்குற இந்த காசுதான் ஏதோ ஒரு விதத்துல என் அம்மாவுக்கும்,சகோதரிக்கும் சந்தோசத்தக் கொடுக்குது எனக்கான கடமை இது சார்...
அப்புறம் என்ன சொன்னீங்க?கண்ணுனு இருந்தா அழுக வருமா?கண்ணு இல்லாட்டியும் கூட அழுக வரும் சார்,மெதுவாக தன் கண்ணாடியை கழற்றுகிறார்...அங்கே விழிகள் இல்லாது இரு குழிகள் மட்டுமே இருளை அப்பியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுறுகிறான்...
என்ன சார் பேசாம நிக்குறீங்க?.....நா பிறவிக் குருடன்....இருந்தாலும் எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு,என்னிக்குமே அத தவிக்க விட்டதில்ல..உங்களுக்கு என்ன சோகமோ எனக்குத் தெரியாது,ஆனா சோகம் என்பது நிரந்தரமல்ல அத மட்டும் புரிஞ்சுக்கோங்க...விழி என்பது எனக்கான குறை பாடு மட்டுமே அத என்னிக்குமே சோகமாகவோ,சுமையாகவோ நா நினைச்சதில்ல......இந்தாங்க மீதி சில்லறை என தெளிவாய் எண்ணிக் கொடுக்கிறார்....நா ஏதாவது தப்பா பேசியிருந்தா என்ன மன்னிச்சி....அதற்குள் அவர் கரங்களைப் பற்றி நீங்கதான் சார் என்ன மன்னிக்கனும்,..இவ்வளவு நாளும் கண் இருந்தும் இருட்ட மட்டுந்தான் பழக்கப்படுத்தி வந்திருக்கேன்...ஆனா நீங்களோ வெளிச்சம்கிறது புறம் மட்டுமல்ல அகத்தையும் சார்ந்ததுனு புரிய வச்சிட்டீங்க....எனக்குள்ளும் இப்போ வெளிச்சம் கிடச்சாச்சு...என் போதியே உங்களை வணங்குகிறேன்..நிறைந்த மனதோடு வெளியில் வருகிறான்...வானத்தில் ஒரு வளர்பிறை தன் பெளர்ணமிக்கான பயணத்தை தொடர்வதைப் பார்த்துக் கொண்டே நடக்கிறான்......தூரத்தில் எங்கோ விஷப்பாட்டில் உடையும் சப்தம் கேட்கிறது.
Friday, May 22, 2009
உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......
FACT FILE : A MUST READ !!!!
உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.
1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் ( Michael O'Dwyer ) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.
இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer ) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான்.. ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.
துவள வில்லை உதம் சிங் , அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து ( Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்
மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400 ௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.
பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர் , ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள் .
சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்............ .....
400 ௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்......
ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400 ௦௦ பொது மக்களை மற்றும் 800 ௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா ?
? ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது ? - மகாத்மா காந்தி
400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால் .....
அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.
பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா ?
அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா ?
நல்ல நியாம்டா சாமி............ . .
சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு , இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......
ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....
'' ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன் , யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன் , விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.
ஆனால் ரன்பீர் சிங்கோ , ' இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால் , நமக்குள் எந்த உறவும் இருக்காது ' என்று சொல்ல...
யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்! ''
ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன் ?
ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது............ ....
மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்............. ........
1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh . அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.
இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!
இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...
பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா ? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன் ?
அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே ?
சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...
அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும் ( ஒற்றை கண் சிவராசன் ? உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன் ?
இந்த வழக்கில் மேலும் நளினி , பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன் ?
இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன் ? ??
இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)
ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!
எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள் ?
இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது , தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்.........
அட நாய்களே.....
நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை ?.. இந்தியனாக இருக்க தேவை இல்லை ?.. தமிழனாகவோ இருக்க தேவை இல்லை
மனிதனாக இருந்தால் போதும்.....
இப்படிக்கு ,
மனிதர்
தமிழர்
இந்தியர் ...
Thanks Mr vasanth.
Thursday, May 21, 2009
Monday, May 18, 2009
நரபலி கொடுத்தாயிற்று.....ராஜபக்சே!
புதிய நாட்டை கட்டி எழுப்புவோம் என இன்று ராஜபக்சே அறிவித்திருக்கிறான்....ஆம் அதிகமாய் ஆசைப்படு,பிற உயிர்களை துன்புறுத்து அதுவும் கொடூர முறையில் துன்புறுத்து எனும் புத்தனின் வாக்குத்தத்தத்தை அப்படியே நிறைவேற்றியிருக்கிறானாம் ராஜபக்சே....நரபலியை உலகத்திலேயே எவனும் கொடுக்காதவண்ணம் நாம் புத்தனுக்கு அர்ப்பணித்துள்ளோம்....ஆதலால் ஒரு புதிய புத்த தேசத்தை நாம் கட்டி எழுப்புவோம் என ஆர்ப்பரித்துள்ளான்....இதோ தமிழனின் மண்டைஓடுகளும்,எழும்புத் துண்டுகளும் தயாராயிருக்கிறது புத்ததேசத்தின் பலமான அஸ்திவாரத்திற்கு.....வாருங்கள் அடிமைத் தமிழர்களே நாமும் அவனோடு சேர்ந்து புத்த தேசத்தைக்கட்டி எழுப்புவோம்....வந்தேறிகளுக்காக அயராது உழைப்பதும்...அவர்களுக்கு விசுவாசமாக இருப்பதும் நமக்கொன்றும் புதிதல்லவே!சீக்கிரம் வாருங்கள் அடுத்து வேறு ஒரு வந்தேறியை முன்னேற்றவேண்டாமா...????????????????
கலங்கிய வைகோ...
இன்று காலை இயக்குநர் இமயத்தின் அலுவலகம் சென்றேன்....தமிழ்த் துரோகிகளால் சிதைக்கப் பட்ட நிலையிலேயே அலுவலகம் இருந்தது...டப்பிங் வேறு ஸ்டூடியோவில் நடைபெற்றது....நடிகரும் இயக்குநருமான திரு ஆர்.சுந்தரராஜன் ,இயக்குநர் திரு கெளதம்(சந்தனக் காடு இயக்குநர்)ஆகியோர் முன்னதாகவே வந்துவிட்டார்கள்...பிறகு சட்டக் கல்லூரி மாணவ தலைவர்களும் இயக்குனர் இமையத்தை சந்தித்தனர்.....தலைவர் வைகோ வருவது எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் நாங்கள் கீழ் தளம் வந்து அவரை வரவேற்றோம்..சிதறிக்கிடந்த அலுவலகத்தைப் பார்வையிட்ட திரு வைகோ பெரிதும் வருந்தினார்.பிறகு இயக்குநர் இமயத்திடம் நெடுநேரம் விசாரித்துக்கொண்டிருந்தார்...அதன்பிறகு வெளியில் வந்த திரு வைகொவிடம் இயக்குநர் கெளதம் ஈழம் குறித்து அடுத்து என்ன என கேட்டபொழுது....திரு வைகோவிடம் நான் பதிலை எதிர்பார்த்தேன் ஆனால் மாறாக வார்த்தைகள் வருவதற்கு பதிலாக அவரது கண்கள் கலங்கிற்று...வார்த்தைகள் எதுவுமே பேசாமல் இயக்குநர் கெளதமை அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டு,எங்கள் கரங்களையும் இறுகப் பிடித்தபடியே கண்கலங்கி வெளியே சென்றார்...இறுகியது அவரது நெஞ்சம் மட்டுமல்ல எங்களது நெஞ்சமும்தான்.......
ராஜபக்சேவின் இரத்த வெறி....
dear friends, i am not sure if the following is true or not. its mind touching and thats the only reason i am forwarding this.. soft-hearted people please dont see...
Hitler Re-born
Mahinda Rajapakse – Srilankan President
Srilankan Army Shelled in Civilian Place
Srilankan Army attacked hospital last month…..
What this child did?
This child spoke Tamil language that’s the only reason Srilankan Army did like this

Almost 10 children are killed in this attack... Who is going to question Srilanka ?

Pregnant women brutally killed by Srilankan Army…………
A pregnant women killed by Srilankan army on 17-March-2009 (Baby Child inside her body) ..........
Just 13 year old school student 
Some people may think this is an internal problem of a country....... why we should worry about it ?
-- வெற்றிகள் உனக்கு சிற்பங்கள் பரிசளிக்கலாம்ஆனால்தோல்விகள்தான் உளியை வழங்கும் என்பதை உணர்ந்து கொள்.
ராஜ பக்சே திடீர் தவிப்பு!
ராஜ பக்சே திடீர் தவிப்பு!ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்ததில் ராஜபக்சேவுக்கு பெருத்த வருத்தமாம்...இனி பொழுதைப் போக்க என்ன செய்வது என புலம்புகிறானாம்.....தமிழ் குழந்தைகள் இல்லையாம் கொதிக்கும் தாரில் அமிழ்த்து ரசிக்க..தமிழ்க் கர்ப்பிணிகள் இல்லையாம் கருக்களைக் கலைத்து களிப்போடிருக்க....தமிழ் இளம் பெண்கள் இல்லையாம் உறுப்பை கிழித்து குருதி சுவைக்க...தமிழர்தம் ஒப்பாரி இல்லையாம் அந்த இசையில் மூழ்கி பேரானந்தம் அடைய....இருப்பினும் கொஞ்சம் ஆறுதலடைகிறானாம் பக்கத்தில் ஆறரைகோடி அடிமைத் தமிழர்கள் இருப்பதை நினைத்து....!!!?????????
Sunday, May 17, 2009
இயக்குநர் இமையத்தின் அலுவலகத்தில் இத்தாலி எஜமானியின் நாய்கள் அட்டகாசம்.....
"என் இனிய தமிழ் மக்களே!" உங்கள் பாசத்திற்குரிய பாரதி ராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் ஒருவனும்,சுத்தமான தமிழ்ப் பால் குடித்து வளர்ந்தவனுமான சிவா பேசுகிறேன்....உலகத்தமிழர்களே! கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்..அதுவும் வெளிநாடுகளில் இருந்தால் தயவு செய்து இந்தியாவிற்குள் நுழைந்து விடாதீர்கள்..ஆம்! இத்தாலியிலிருந்து ஒரு எஜமானியம்மா வந்திருக்கிறார்களாம்...தாம் கடித்து துப்பும் எழும்புத் துண்டுகள் வீணாகக் கூடாது என்பதற்காக சில நாய்களை அந்த எஜமானி வளர்க்கிறாராம்.....அந்த எச்சில் துண்டு விசுவாசத்திற்காக அந்நாய்களும் தமிழர்களை மட்டுமே குறிவைத்து தாக்குகிறதாம்.....அப்படித்தான் மே 16 இரவு அந்நாய்க் கூட்டத்தை சேர்ந்த சில வெறிநாய்கள் நம் தமிழினத் தலைவர் திரு பாரதிராஜா அவர்களின் அலுவலகத்தில் புகுந்து அசிங்கம் செய்து வைத்துள்ளது....செய்தி கேள்விபட்டு இன்று காலை நான் இயக்குனர் அலுவலகம் சென்றேன்....செந்தமிழன் சீமான் முதல் திரு பாலசந்தர் வரை அனைவருமே அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தார்கள்....தமிழகத்தின் பல்வேறு தமிழ் அமைப்புகள் இயக்குனரைத் தொடர்புகொண்டு போராட வேண்டும் என கொந்தளித்த போது இயக்குனர் அவர்கள் அமைதிகாக்குமாறு கேட்டுக்கொண்டார்....பரபரப்பான அந்த நிமிடங்களுக்கு மத்தியிலும் ஈழ நிலவரம் குறித்து விசாரித்தபடியே இருந்தார்...நான் கீழே வந்து சிதைக்கப்பட்ட என் பாடசாலையை,என் குருகுலத்தைப் பார்வையிட்டேன்....டப்பிங்,எடிட்டிங் சாதனங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டிருந்தது...நான் நடிகன் என்றபோதிலும் தொழில்நுட்பமும் கற்றுக்கொள்ள உதவி புரிந்தார் இயக்குனர் இமையம்...எனக்கு கற்றுக்கொடுத்த பாடசாலை இன்று சில நாய்களால் அசிங்கப்படுத்தப்பட்டுவிட்டது....நெஞ்சு பொறுக்கவில்லைதான் இருப்பினும் என் செய்வேன்...எதிர்ப்பு சக்தியில்லா ஒரு இனத்தில்,ஒரு இடத்தில் பிறந்துவிட்டேனே..ஆதலால் தமிழர்களே...தயவு செய்து தமிழன் என்று வாயைத் திறந்துவிடாதீர்கள்.....வழக்கம் போல் பயந்து,ஒடுங்கி,அடிமையாகவே இருங்கள்....நாய்கள் ஜாக்கிறதை.........
Posted by
Unknown
at
12:29 PM
2
comments
Labels: இயக்குநர் இமையத்தின் அலுவலகத்தில் இத்தாலிய எஜமானியின் .
Thursday, May 7, 2009
நெல்லையில்" வல்லினம் தமிழர் களம்" காங்கிரசுக்கு எதிராக நடத்திய நூதன போராட்டம்
நெல்லையில்" வல்லினம் தமிழர் களம்" காங்கிரசுக்கு எதிராக நடத்திய நூதன போராட்டம்
Staff Reporter
Do not support the Congress in Parliamentary polls: youth
EMOTIONAL APPEAL: A youth appealing to voters in a bus in Tirunelveli.
TIRUNELVELI: Even as leaders and cadres of the political parties are appealing to the voters to support their candidates, a group of youths, attached to ‘Vallinam Thamizhar Kalam’, is falling at the feet of every voter with an appeal: “Don’t support the Congress in the ensuing Parliamentary polls”.
The reason, according to them: “The national party failed to protect the Sri Lankan Tamils”.
The youths, who got into every bus parked at Tirunelveli Junction bus-stand on Saturday evening, explained loudly the situation prevailing in Sri Lanka and the attacks being unleashed by the armed forces. The placard hanging from the neck of one Siva said that the Tamil race would not support the Congress, which “failed” to save the Sri Lankan Tamils.
“Innocent children, women, aged and the physically challenged who don’t carry any arm, are being hunted down in the heavy shelling and aerial attack. The Congress Government at the Centre, which has the duty of protecting the Tamils from being wiped out, is not willing to do so. Hence, my dear Tamil voters don’t support the Congress candidates in the election,” they said, even as some of the women passengers started crying and the men voters are listening to them seriously.
Once the speech is over, they fell at the feet of every voter and pressed their only appeal once again.
“We’ll visit all the constituencies wherever the Congress has fielded its candidates,” they said.
-The Hindu(may 3)
Tuesday, April 28, 2009
Saturday, August 2, 2008
அமீபா To அகிலாண்டம்
பூமியின் சுற்று அதற்கான விதிகளுடன் தடையுறாது சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது...ஆனால் அதன் முக(ங்கள்)ம் மட்டும் அது சார்ந்த விலங்கின் மிச்சங்களால் கிழிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது,
ஜாதி,மதம்,இனம்,மொழி,விஞ்ஞானம் என அதன் கூர் நகங்களால் குதறப்பட்டுக்கொண்டே வருகிறது.
விஞ்ஞானத்தால் சிற்சில நன்மை இருப்பினும் அதன்வீச்சு பஞ்சபூதங்களையும் பகைத்துவிட்டது.
வானைத்துளைத்து ஓசோன் ஓட்டை இடுவதிலும்,காற்றைக் கிழித்து கார்பன் துகள்கள் நடுவதிலும்,தன் கழிவுகளால் நீரின் மூலக்கூறுவையே மாற்றுவதிலும்,பச்சை விரிக்கும் காடுகள் அழித்து கான்கிரீட் காடுகள் அமைப்பதிலும்,திட வடிவில் நெருப்பை ஏவி குண்டுகள் என கும்மாளமிடுவதிலும்..புல் பூண்டு,புழு பூச்சிகள் முழைக்காவண்ணம் கதிவீச்சுக்களின் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதிலும் என விஞ்ஞானத்தி வீச்சு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது...
எங்கும் வன்முறை ,மனிதனை மனிதனே கொன்று குவிக்கும் பயங்கரம்,சுடப் பட்டும்,சுட்டுக்கொண்டும் இருக்கும் கொடூரம் என இதே நிலை இன்னும் நீடித்தால் மூன்று பகுதி நீரால் நிரம்பியிருக்கும் பூமி மிச்சமுள்ள ஒரு பகுதியையும் நீரால் நிரப்பக்கூடும்,அந்த நீர் மனித இனத்தின் கண்ணீராகவும் மானுடக்குருதியின் செந்நீராகவும் இருக்கக்கூடும்.
அட மனிதப்பாவிகளே!
உலகம் இப்படித்தான் இருந்தது என்று நாளைய உயிருக்கு எடுத்துச் சொல்ல ஓர் உயிர்தடையத்தையாவது விட்டுச் செல்வோமே..!!!
ஏனெனில் இனி சாத்தியமில்லை அமீபா தொடங்கி,அகிலமும் நிரம்பும் பரிணாம வளர்ச்சி.
Sunday, July 27, 2008
இப்படிக்கு தீவிரவாதி....
எங்கள் கடவுள்
ஒரு இரத்தக் காட்டேறி!
மானிடக் குருதியே
அவர்தம்
அபிசேகத்திற்குரியது என்பதாலும்,
அபிசேகப் பிரியர்
அவர் என்பதாலும்
மானுடக் குவியலைக்
கொன்று குவிக்கிறோம்
கடவுளின் போர் என
வென்று மகிழ்கிறோம்.....
எங்களின்
சந்தோசம்
நிம்மதி
மோட்சம்
முக்தி
எல்லாம் எல்லாம்
மனிதக் குருதியே...
எங்களின் கொள்கை
இரத்தம்!இரத்தம்!இரத்தம்!
எங்களின் இலட்சியம்?!
இது வரை தெரியாது...
எங்கள்
தாயின் மார்புகள்
பால் சுரப்பதை விட
இரத்தம் சுரப்பதையே
அதிகம் விரும்பும்
வித்தியாசப் பிறவிகள்
நாங்கள்..
எங்கள் பூங்காக்களை
புல்லட்டுகள் பூப்பிக்கவே
பயன்படுத்துவோம்...
ஆலயங்கள் தோறும்
அணுகுண்டு விளைவித்து
எங்கள்
மகசூலைப் பெருக்குவோம்..
எம் கடவுள்
புசிக்க ஏதுமில்லாது
பசித்துக் கிடக்கையில்
எம் உயிரையே வெடித்து
சுவைக்கக் கொடுப்போம்..
மனித வெடிகளாய்
எம்மையே சமைப்போம்..
தாத்தா,பாட்டி
அம்மா,அப்பா
மாமா,மாமி
சித்தப்பா,சித்தி
அண்ணன்,அக்கா
தம்பி,தங்கை
மருமகன்,மருமகள்
மதனி,கொழுந்தியா என
உங்களைப் போல்
உறவுகள்சொல்லி
சிரித்து வாழ
எங்களால் இயலாது...
ஏனெனில்
நாங்கள்
விலங்கின் கடைசி மிச்சம்..
விலங்குகட்கு ஏது
சிரிப்பு?
ஆமாம்!
மனிதனைக் கொல்கிறோம்
மனிதனைக் கொல்கிறோம்
என்று
மார்தட்டிக்கொள்(ல்)கிறோமே...
அப்படியானால்.....
நாங்கள்.....???????????????
இப்படிக்கு
தீவிரவாதி......
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருடன் சந்திப்பு
இயக்குனர் இமையம் திரு பாரதி ராஜா மற்றும் மலேசிய அமைச்சர் திரு டத்தோ சாமிவேலு ஆகியோருக்கான தசாவதார படத்திற்கான சிறப்புக் காட்சி four frames studio வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.....இயக்குனர் இமைய உபயத்தால் அடியேனும் அந்த சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டேன்....அப்பொழுது இயக்குனர் திரு கே.எஸ்.ரவிகுமார் அவர்களை சந்தித்து இணையதள விமர்சனங்கள் குறித்து விவாதித்தேன்....சில விமர்சனங்கள் அவரை பாதித்துள்ளது....முன்னதாக அவரது அயராத உழைப்பின் சாதனைக்கு தலைவணங்கினேன்....இணையதள விமர்சனங்கள் குறித்த எனது பதிவையும் அவரிடம் காண்பித்தேன்... 
(அலை பேசியில் படம் பிடித்தவர் அறைகுறையாய் படம்பிடித்துவிட்டார்)
Friday, June 20, 2008
தசாவதாரம் Vs விமர்சனங்கள்
வலைபூக்களில் சமீபத்தில் பெரிதும் பதிவிடப்பட்டது தசாவதாரம் திரைப் படம் குறித்த விமர்சனங்களே...
விமர்சனம் மிக முக்கியம் என கருதுபவன் நான்,,நான் ரசிகனாய் இருப்பதை விட விமர்சகனாய் இருப்பதையே பெரிதும் விரும்புகிறேன்..நம் பார்வைத் தரம் உயர்ந்துள்ளதும் வரவேற்கத் தக்கதே..அதற்காக விளையாட்டுக்காய் விமர்சித்துத் தள்ளாதீர்கள்....
விமர்சனங்களே கலைஞனை செதுக்குகிறது,குறைகளை நிறைமதியோடு சுட்டிக்காட்டினால் நிச்சயம் கலைஞன் அதை ஏற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்வான்...
நுணுக்கமான செதுக்கல்களே கல்லை சிற்பமாக்கும்..உங்கள் விமர்சனங்கள் கலைஞனை செதுக்கும் உளியாகமட்டுமே இருக்கட்டும் தயவு செய்து கடப்பாறை கம்பி எடுத்து காயப்படுத்தாதீர்கள்..
சொல்லுதல் யார்க்கும் எளியதுதான்...நம்மால் பிரசவ வலியை பார்க்கத்தான் முடியும் ஆனால் உணர்வு என்பது அந்த குழந்தையை ஈன்றெடுத்த தாய்க்குமட்டுமே பரீட்சையம்.....visual படுத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
என்னதான் ஒரு சினிமா படைப்பாளி தான் நினைத்ததை,தன் வாழ்வில் அள்ளிமுடித்த யதார்த்தங்களை,கதாப்பாத்திரங்களை,காட்சிப்பதிவுகளை அப்படியே திரையில் கொண்டுவர நினைத்தாலும் அதற்கு அவர்மட்டும் நினைத்தால் போதாது அவரோட மனநிலைக்கு,எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு ஒத்துப்போகக்கூடிய சக கலைஞர்களின் ஒத்துழைப்பு தேவையானதாக இருக்கிறது...இதில் யாரேனும் ஒருவரால் சிறு தவறு நிகழ்ந்தாலோ அல்லது படைபாளியின் எண்ணஓட்டத்திலிருந்து வேறுபட்டு நின்றாலோ அந்த படைப்புத் தரத்தை குறைத்து மதிப்பிட அதுவும் ஒரு காரணமாகிவிடும்...அதற்காக ஒட்டுமொத்த படைப்பையும்,ஒட்டுமொத்த உழைப்பையும் குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
அதுவும் உலகத்தரத்திற்கு தம்மையே முழுமையாக அர்ப்பணித்து..நம் தமிழ் சூழலுக்கு ஏற்றவாறு தன் நிலைகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்துவரும் கமல் போன்ற மாபெரும் கலைஞனை,அவர் பணியை குறையிட்டு சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
தமிழ்மணம் போன்ற பெரும் வளைத்தளங்களில் பசியாறலாம், உணவு பறிமாறலாம், அதில் எதற்கு விஷத்துளி?
எத்தனையோ வாசகர்கள் ,எத்தனையோ பதிவர்கள் ஒவ்வொரு நொடியும் இதுபோன்ற வளைத்தளங்களை சொடுக்குகிறார்கள்,
ஒருவேளை தேடல்,தேடல் என்று தீரா தாகத்தோடு திரியும் கலைஞானி கமல் அவர்களும் தசாவதாரம் குறித்த விமர்சனங்களை படிக்க நேர்ந்தால்?
அதுவும் "தசாவதாரம் படத்த பார்க்க போனதுக்கு என் புத்தியை செருப்பாலதான் அடிக்கோனும்"போன்ற விமர்சனங்களை பருக நேர்ந்தால்?அவர் மனம் என்னபாடு பட்டிருக்கும்..
படம் பார்த்துவிட்டோ அல்லது கமல் அவர்களை பிடிக்காது போயிருந்தோ இது போன்ற தலைப்பை பதிவிட்டிருக்கிறாரா எனறால் இல்லை "டிக்கெட் கிடைக்காது எழுந்த கோபத்தின் உச்சமாக அல்லது வலைப்பூவின் வசீகரத்திற்காக அப்படி பதிவிட்டிருக்கிறார்..என்ன கொடுமை இது?????!!!
நுனிப்புல் மேய்கிறவற்கள் அந்த தலைப்பைப் பார்த்த்விட்டு நாலு பேரிடம் சொன்னாலே போதும்(படம் சரி இல்ல மாப்ல நெட்ல படிச்சேன்) அந்த நாலு நாற்பதாகி,நாற்பது நானூறாகி இறுதியில் ஆர்வம் குறைந்து cd யில் பார்த்துக்கொள்ளலாம் என முடங்கி விடுவார்களே?
சினிமா இழப்பு என்பது படைப்பாளிக்கு மட்டுமல்ல எங்கோ ஓர் திரை அரங்கில் சுண்டல் விற்கும் ஓர் சிறு வியாபாரிக்கும் அது பாதிப்புதான்..
விமர்சனங்களை நான் குறைசொல்லவில்லை..தேவையற்ற குறைகளை நான் விமர்சிக்கிறேன் அவ்வளவே..
உங்கள் விமர்சனங்கள் கலாச்சாரத்தைப் பாழாக்கும் சினிமாக்களுக்கு வாளாகட்டும்...கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சினிமாக்களுக்கு வேலியாகட்டும்....
உண்மையான கலைஞனை அடையாளம் காணுங்கள் , போலியான கலைஞனை அடிஆழம் போடுங்கள்....











