தேடலும் தேடல் நிமித்தமும்..

Friday, June 20, 2008

தசாவதாரம் Vs விமர்சனங்கள்

வலைபூக்களில் சமீபத்தில் பெரிதும் பதிவிடப்பட்டது தசாவதாரம் திரைப் படம் குறித்த விமர்சனங்களே...

விமர்சனம் மிக முக்கியம் என கருதுபவன் நான்,,நான் ரசிகனாய் இருப்பதை விட விமர்சகனாய் இருப்பதையே பெரிதும் விரும்புகிறேன்..நம் பார்வைத் தரம் உயர்ந்துள்ளதும் வரவேற்கத் தக்கதே..அதற்காக விளையாட்டுக்காய் விமர்சித்துத் தள்ளாதீர்கள்....

விமர்சனங்களே கலைஞனை செதுக்குகிறது,குறைகளை நிறைமதியோடு சுட்டிக்காட்டினால் நிச்சயம் கலைஞன் அதை ஏற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்வான்...

நுணுக்கமான செதுக்கல்களே கல்லை சிற்பமாக்கும்..உங்கள் விமர்சனங்கள் கலைஞனை செதுக்கும் உளியாகமட்டுமே இருக்கட்டும் தயவு செய்து கடப்பாறை கம்பி எடுத்து காயப்படுத்தாதீர்கள்..
சொல்லுதல் யார்க்கும் எளியதுதான்...நம்மால் பிரசவ வலியை பார்க்கத்தான் முடியும் ஆனால் உணர்வு என்பது அந்த குழந்தையை ஈன்றெடுத்த தாய்க்குமட்டுமே பரீட்சையம்.....visual படுத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

என்னதான் ஒரு சினிமா படைப்பாளி தான் நினைத்ததை,தன் வாழ்வில் அள்ளிமுடித்த யதார்த்தங்களை,கதாப்பாத்திரங்களை,காட்சிப்பதிவுகளை அப்படியே திரையில் கொண்டுவர நினைத்தாலும் அதற்கு அவர்மட்டும் நினைத்தால் போதாது அவரோட மனநிலைக்கு,எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு ஒத்துப்போகக்கூடிய சக கலைஞர்களின் ஒத்துழைப்பு தேவையானதாக இருக்கிறது...இதில் யாரேனும் ஒருவரால் சிறு தவறு நிகழ்ந்தாலோ அல்லது படைபாளியின் எண்ணஓட்டத்திலிருந்து வேறுபட்டு நின்றாலோ அந்த படைப்புத் தரத்தை குறைத்து மதிப்பிட அதுவும் ஒரு காரணமாகிவிடும்...அதற்காக ஒட்டுமொத்த படைப்பையும்,ஒட்டுமொத்த உழைப்பையும் குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
அதுவும் உலகத்தரத்திற்கு தம்மையே முழுமையாக அர்ப்பணித்து..நம் தமிழ் சூழலுக்கு ஏற்றவாறு தன் நிலைகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்துவரும் கமல் போன்ற மாபெரும் கலைஞனை,அவர் பணியை குறையிட்டு சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

தமிழ்மணம் போன்ற பெரும் வளைத்தளங்களில் பசியாறலாம், உணவு பறிமாறலாம், அதில் எதற்கு விஷத்துளி?

எத்தனையோ வாசகர்கள் ,எத்தனையோ பதிவர்கள் ஒவ்வொரு நொடியும் இதுபோன்ற வளைத்தளங்களை சொடுக்குகிறார்கள்,
ஒருவேளை தேடல்,தேடல் என்று தீரா தாகத்தோடு திரியும் கலைஞானி கமல் அவர்களும் தசாவதாரம் குறித்த விமர்சனங்களை படிக்க நேர்ந்தால்?
அதுவும் "தசாவதாரம் படத்த பார்க்க போனதுக்கு என் புத்தியை செருப்பாலதான் அடிக்கோனும்"போன்ற விமர்சனங்களை பருக நேர்ந்தால்?அவர் மனம் என்னபாடு பட்டிருக்கும்..
படம் பார்த்துவிட்டோ அல்லது கமல் அவர்களை பிடிக்காது போயிருந்தோ இது போன்ற தலைப்பை பதிவிட்டிருக்கிறாரா எனறால் இல்லை "டிக்கெட் கிடைக்காது எழுந்த கோபத்தின் உச்சமாக அல்லது வலைப்பூவின் வசீகரத்திற்காக அப்படி பதிவிட்டிருக்கிறார்..என்ன கொடுமை இது?????!!!

நுனிப்புல் மேய்கிறவற்கள் அந்த தலைப்பைப் பார்த்த்விட்டு நாலு பேரிடம் சொன்னாலே போதும்(படம் சரி இல்ல மாப்ல நெட்ல படிச்சேன்) அந்த நாலு நாற்பதாகி,நாற்பது நானூறாகி இறுதியில் ஆர்வம் குறைந்து cd யில் பார்த்துக்கொள்ளலாம் என முடங்கி விடுவார்களே?

சினிமா இழப்பு என்பது படைப்பாளிக்கு மட்டுமல்ல எங்கோ ஓர் திரை அரங்கில் சுண்டல் விற்கும் ஓர் சிறு வியாபாரிக்கும் அது பாதிப்புதான்..
விமர்சனங்களை நான் குறைசொல்லவில்லை..தேவையற்ற குறைகளை நான் விமர்சிக்கிறேன் அவ்வளவே..

உங்கள் விமர்சனங்கள் கலாச்சாரத்தைப் பாழாக்கும் சினிமாக்களுக்கு வாளாகட்டும்...கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சினிமாக்களுக்கு வேலியாகட்டும்....

உண்மையான கலைஞனை அடையாளம் காணுங்கள் , போலியான கலைஞனை அடிஆழம் போடுங்கள்....


6 comments:

said...

right said, appreciate your blog very much...

Cheers,
Viji

said...

நன்றி விஜி........
தொடரட்டும் தங்கள் பின்னூட்டம்....

said...

மிகவும் சரி நண்பரே ஒருவரின் உழைப்பை குற்றம் சொல்லவே சிலர் திரிகிறார்கள். இவர்கள் திருந்தமாட்டார்கள்.

said...

//மிகவும் சரி நண்பரே ஒருவரின் உழைப்பை குற்றம் சொல்லவே சிலர் திரிகிறார்கள். இவர்கள் திருந்தமாட்டார்கள்.//

:) :)

குறைகளை சுட்டிக்காட்டுவது ஒன்றும் தவறில்லை.

ஆனால் சில இடுகைகளில் கூறப்பட்டிருப்பது போல் இது மோசமான படம் இல்லை.

மிகச்சிறந்த பொழுதுபோக்கு படம்.

உங்களுக்கு புரியுமென்றால் புஷ்ஷின் பொது அறிவு, உயிர்பயங்கரவாதம் போன்ற விடயங்களை ரசிக்க முடியும் :) :)

புரியாவிட்டால் கூட ரசிப்பதற்கு படத்தில் நிறைய இருக்கிறது

said...

Well said.. i would not say this is a worst film.. இது கண்டிப்பாக தமிழ் சினிமாவின் ஒரு வித்தியாசமான முயற்சி. நாம் புரிந்து கொள்ளவும் நிறைய இருக்கிறது. 2 மணி நேரம் நம்மை கட்டிப்போடும் ஒரு படம் தான் இது...

குற்றம் சொல்றத விட என்ன சொல்றாங்கன்னு புரிஞ்சுக்கலாம்....

said...

வந்தியத்தேவன்,புரூனொ,பூமி அனைவரும் வருக...உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...