தேடலும் தேடல் நிமித்தமும்..

Sunday, July 27, 2008

இப்படிக்கு தீவிரவாதி....

எங்கள் கடவுள்
ஒரு இரத்தக் காட்டேறி!

மானிடக் குருதியே
அவர்தம்
அபிசேகத்திற்குரியது என்பதாலும்,
அபிசேகப் பிரியர்
அவர் என்பதாலும்

மானுடக் குவியலைக்
கொன்று குவிக்கிறோம்
கடவுளின் போர் என
வென்று மகிழ்கிறோம்.....

எங்களின்
சந்தோசம்
நிம்மதி
மோட்சம்
முக்தி
எல்லாம் எல்லாம்
மனிதக் குருதியே...

எங்களின் கொள்கை
இரத்தம்!இரத்தம்!இரத்தம்!

எங்களின் இலட்சியம்?!
இது வரை தெரியாது...

எங்கள்
தாயின் மார்புகள்
பால் சுரப்பதை விட
இரத்தம் சுரப்பதையே
அதிகம் விரும்பும்
வித்தியாசப் பிறவிகள்
நாங்கள்..

எங்கள் பூங்காக்களை
புல்லட்டுகள் பூப்பிக்கவே
பயன்படுத்துவோம்...

ஆலயங்கள் தோறும்
அணுகுண்டு விளைவித்து
எங்கள்
மகசூலைப் பெருக்குவோம்..

எம் கடவுள்
புசிக்க ஏதுமில்லாது
பசித்துக் கிடக்கையில்
எம் உயிரையே வெடித்து
சுவைக்கக் கொடுப்போம்..

மனித வெடிகளாய்
எம்மையே சமைப்போம்..

தாத்தா,பாட்டி
அம்மா,அப்பா
மாமா,மாமி
சித்தப்பா,சித்தி
அண்ணன்,அக்கா
தம்பி,தங்கை
மருமகன்,மருமகள்
மதனி,கொழுந்தியா என
உங்களைப் போல்
உறவுகள்சொல்லி
சிரித்து வாழ
எங்களால் இயலாது...

ஏனெனில்
நாங்கள்
விலங்கின் கடைசி மிச்சம்..

விலங்குகட்கு ஏது
சிரிப்பு?

ஆமாம்!
மனிதனைக் கொல்கிறோம்
மனிதனைக் கொல்கிறோம்
என்று
மார்தட்டிக்கொள்(ல்)கிறோமே...

அப்படியானால்.....
நாங்கள்.....???????????????

இப்படிக்கு
தீவிரவாதி......


6 comments:

said...

நல்ல ஆழமான கருத்துடயக் கவிதை,

said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி rapp அவர்களே.......
தொடரட்டும் தங்கள் பின்னூட்டம்....

said...

\\எம் கடவுள்
புசிக்க ஏதுமில்லாது
பசித்துக் கிடக்கையில்
எம் உயிரையே வெடித்து
சுவைக்கக் கொடுப்போம்..//

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..

said...

\\எம் கடவுள்
புசிக்க ஏதுமில்லாது
பசித்துக் கிடக்கையில்
எம் உயிரையே வெடித்து
சுவைக்கக் கொடுப்போம்..//

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..//

மிக்க நன்றி சகோதரி...

Anonymous said...

ஆழமான கவிதை ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க நன்றி

said...

காலத்தின் கோலத்தினால் நாம் இருவரும் தனி தனி புள்ளிகளாய் நட்பு என்னும் நேர் கோட்டில் இணைக்கப்பட்டிருக்கும் நாம் திசைமாறி பிரிந்தாலும் தினம் நம்மை நினைத்திடுவோம்