இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருடன் சந்திப்பு
இயக்குனர் இமையம் திரு பாரதி ராஜா மற்றும் மலேசிய அமைச்சர் திரு டத்தோ சாமிவேலு ஆகியோருக்கான தசாவதார படத்திற்கான சிறப்புக் காட்சி four frames studio வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.....இயக்குனர் இமைய உபயத்தால் அடியேனும் அந்த சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டேன்....அப்பொழுது இயக்குனர் திரு கே.எஸ்.ரவிகுமார் அவர்களை சந்தித்து இணையதள விமர்சனங்கள் குறித்து விவாதித்தேன்....சில விமர்சனங்கள் அவரை பாதித்துள்ளது....முன்னதாக அவரது அயராத உழைப்பின் சாதனைக்கு தலைவணங்கினேன்....இணையதள விமர்சனங்கள் குறித்த எனது பதிவையும் அவரிடம் காண்பித்தேன்...
(அலை பேசியில் படம் பிடித்தவர் அறைகுறையாய் படம்பிடித்துவிட்டார்)
6 comments:
ஏங்க ஜாலியாத்தானே எல்லாரும் விமர்சனம் பண்றாங்க. அதுக்குக் கமலே சூப்பரா பதில் கொடுத்து ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொள்ளும்போது ஏன் அவர் இப்படி பீல் பண்றாரு?
vanakam,
just wanted to point out that Mr.SamyVellu is no more a Minister in the Cabinet. he is just the president of Malysian Indian Congress.
pardon the comments in English as i'm yet to install software for tamil fonts.
raap அவர்களுக்கு நன்றி....
இயக்குநர் கே.எஸ் அவ்ர்களும் ஸ்போர்ட்டிவான ஆளுதான்...இருப்பினும் நம்மில் எத்தனைபேர் நிறைகளை சொல்லப் பழகியிருக்கிறோம்?...புகழ் பெற்ற ஓவியர் ஒருவர் ஓவியக் கண்காட்சியில் தனது ஓவியத்தை வரைந்து வைத்துவிட்டு வருகை தருவோர் நிறைகளை எழுதுங்கள் என்று எழுதிவைத்துவிட்டுப் போனாராம்,மறுநாள் ஓவியத்தைப் பார்க்க வருகிறார் அவருக்கு அதிர்ச்சி ஓவியம் அப்படியே இருக்கிறது,எவ்வித நிறைகளும் சுட்டப் படவில்லை....பிறகு அவரே மீண்டும் ஒவியத்தில் எழுதுகிறார் இதன் குறைகளை சுட்டுங்கள் என்று,
மறுநாள் பார்க்கிறார்,அந்த ஓவியம் இருந்த சுவடே தெரியாது குறைகள் நிரம்பிக் கிடந்ததாம்....குறைகளை சுட்டிக்காட்டுங்கள் தவறில்லை அதை நிறை மதியொடு செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன்....
கேலி செய்யும் நோக்கில் கேவலமாய் இருந்த சில விமர்சனங்கள் குறித்து இயக்குநரிடம் பேசிய போது கொஞ்சம் ஆதங்கப்பட்டார் அவ்வளவே...அய்யய்யோ என்னையே ஃபீல் பண்ண வச்சிட்டீங்களே.......

ஆனால் ரவி எல்லா இடத்திலேயும் கொஞ்சம் கூடுதலாகத்தான் கோபப்பட்டார் !
என்ன காரணம் என்று தான் தெரியவில்லை ! சிங்கிதம் சீனிவாஸ் வேலையை நமக்கு கொடுத்து விட்டார்களே என்ற கோபமாகக்கூட இருக்கலாம் !!
தகவலுக்கு நன்றி அஜய்.....
Post a Comment