தேடலும் தேடல் நிமித்தமும்..

Sunday, December 10, 2006

அத்தமக ஒனக்காக...

சமீபத்தில் நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பு ஒன்றைப் படித்தேன்,
வாய் மொழி இலக்கியம் இன்று எழுத்துருவில் வந்ததில் மகிழ்ச்சி...
சரி நம்மாளுக்கு நாமளும் ஒரு நாட்டுப்புறப் பா எழுதலாமேனு யோசிச்சேன் ...
இதோ இந்த பழய பட்டிக்காட்டானின் புதிய வரிகள்....

சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சி
சித்திரமா சேல கட்டி
வட்டநிலா பொட்டு வச்சி
வடிவழகா போறவளே-உன்

எண்ணத்தில நா இருந்தும்
என்ன விட்டுப் போறியடி
இன்னுமொரு மொறமாமன்
இனி ஒனக்கு இல்லையடி..

அத்த மக ஒனக்காக
அமெரிக்கா போவனும்னு
வெட்டி வெத வெதச்சேன்
வெதச்ச நெல்லும் அறுத்து வச்சேன்...

சிமிளி வெளிச்சத்தில
சீண்டி விடும் இடையழக
கரண்டு வெளிச்சத்தில
கண்டு வர நா நெனச்சேன்

ஓலக்குடிசையில
ஒத்தயில இருப்பேனு
ஒசத்தியா ஓட்டு வீடு
ஒனக்காக கட்டி வச்சேன்

ஆட்டு விரலாட்டி
ஆயுசு குறயுமுன்னு
கரண்டு கிரைண்டரொன்னு
கடையில நா பாத்து வச்சேன்

அம்மிக்கல்லு நச்சி
அந்நிக்கு நீ அழுதையின்னு
அழகான மிக்சி ஒன்னு
அடுத்த நாளே வாங்கி வச்சேன்

தேக்கு மரக் கட்டிலிலே
தேவியம்மா நீ படுக்க
வாக்கு சொல்லி வந்து விட்டேன்
வடிவழகா செஞ்சு வெக்க

உச்சி வெயில் நேரத்தில
உள்ளங்கை வேக்குமுன்னு
கச்சிதமா காத்தாடி
கடயில நா வாங்கி வச்சேன்

ஒடக்கருவ வெறவு வச்சி
ஒக்காந்து பொக மூட்டி
ஒருவெறவும் எரியலேனு
ஒப்பாரி வச்சயீன்னு

காரு ஏறி கடைக்குப் போயி
காஸ் அடுப்பு வாங்கி வந்து
காட்டனும்னு ஓடி வந்தா
கண்டுக்காம போறியடி...


5 comments:

said...

இன்னும் கண்டுக்கலையா??? ரொம்ப பாவங்க நீங்க...

இந்த கவிதைய அப்படியே கொண்டு போய் குடுங்க... கண்டிப்பா ஓகே சொல்லுவாங்க...

said...

வருக! அரசியாரே! வருக! தாங்கள்தான் எனது முதல் வாசகர்...நன்றி!blog பற்றி அவ்வளவாய்த் தெரியாது விரைவில் தெளிவாய் வருகிறேன்....
அப்புறம் கண்டுக்காம போன அந்த அத்த மக என் கற்பனையே...

said...

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க???

இப்படி கண்டுக்காம போய்ட்டாங்களே... பாவம் நம்ம பொதிகை சாரல்ன்னு நேத்து மதியம் ஒரு சிக்கன் பிரியாணி, ஒரு fish fry தவிர வேற எதுவும் சாப்பிடாம இல்ல feel பண்ணிட்டு இருந்தேன்....

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் !

said...

சண் ஷிவா அவர்களே
வித்யாசமானவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்
வெற்றி பெறுபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்யாசமே
இந்த வித்யாசம்தான்

முதன் முதலில் வித்யாப்யாசம்
எல்லாக் குழந்தைகளுக்கும் உண்டு
ஆனால் சில குழந்தைகள்தான் வித்யாப்யாசத்தை வித்யாசமான அனுபவமாகக் கொண்டு
வித்யாசப் படும்
வெற்றி பெறும்
நீர் ஒரு வித்யாசக் குழந்தை
வாழ்க உமது வித்யாசமான முயற்சி

நானும் ஒரு நடிகன் ,கவிஞ்ஜன்,எழுத்தாளன்
என் இயற் பெயர் கிருஷ்ணமாச்சாரி
புனைப் பெயர் தமிழ்த்தேனீ
நான் பல தொலைக் காட்ச்சி தொடர்களிலும்,திரைப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்

சித்தீ,மற்றும் பலதொடர்கள்.இப்போது
கோலங்களில் சிங்கப்பூர் சம்பந்தியாகவும்,ஆனந்தத்தில் என்னுடைய இயற் பெயர் கிருஷ்ணமாச்சாரி கல்லூரி தாளாளராகவும் நடித்துக் கொண்டிருக்கிரேன்,
சிவாஜி திரைப் படத்தில் இசைக் கருவிகளின் கூடத்தில் மேனேஜராகவும் நடித்திருக்கிறேன்

உமது படைப்புகள் படித்தேன்
வித்யாசமான படைப்புகள்தான்
உமது குறும்பும்வித்யாசமான
சிந்தனைதான்

என்னுடைய
www.thamizthenee.blogspot.com
சென்று பாருங்கள்

வித்யாசமான பேரன்புடன்
தமிழ்த் தேனீ