தேடலும் தேடல் நிமித்தமும்..

Saturday, January 6, 2007

வளர்க சினிமா !

சமீபத்தில் இயக்குநர் சங்கர் அவர்களின் தயாரிப்பில் இயக்குநர் G.வசந்தபாலன் இயக்கி வெளிவந்திருக்கும் படம் வெயில்..


விஞ்ஞான வியப்பில் மிக மிக முக்கியமானது சினிமா எனும் ஊடகம்..அந்தப் பொக்கிஷத்தை சரியாகப் பயன்படுத்தியிருப்பாதால் வசந்தபாலனுக்குப் பாராட்டுக்கள்...
வெறும் COMMERCIAL கலவையாகத் திரைப்படங்கள் உருப்பெற்று சீரழியும் இந்த காலகட்டத்தில் உண்ர்வுகளுக்கு உயிர்கொடுத்து உயிர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கும் சிறந்த படமாக வெயில் நம் மீது விழுந்துள்ளது...


ந்ம் பண்பாடு,கலாச்சாரம்,வட்டார வழக்கு,இன்னும் மிச்சமிருக்கும் நம் கிராமத்து வாழ்க்கைமுறை ..என அத்தனையும் அப்படியே பதிவு செய்து நம் அடையாளத்தைப் பாதுகாத்திருக்கிறது இந்த வெயில்...


மனுகுலத்தின் தோற்றம், வள்ர்ச்சி,மாறுபாடுகள் அனைத்தும் நம் எதிர்கால சந்ததிக்கு சரித்திரமாக வேண்டும் எனில் இது போன்ற படங்கள் வரவேற்கப்படவேண்டும்...


பொழுதுகளைப் போக்கும் படமாக இல்லாமல்..பொழுதுகளை ஆக்கும் இது போன்ற படங்களே நம் பார்வைக்குப் படவேண்டும்..


படைப்பாளிகள் மட்டுமல்ல பார்வையாளர்களாகிய நாமும் சிற்பிதான் இனிமேலாவது நம் பார்வையை செதுக்கி,ந்ம் ரசனையை உயர்தரமாக்குவோம்...


அகிரோகுரோசாவாக்களும்,சத்யஜித்ரேக்களும் நம்முள்ளும் உருவாக ,உருவாக்க நம் பார்வையின் தரம் மிக முக்கியம்..நல்ல படங்களை ஆதரிக்கும் பாங்கு நம்முள் வந்துவிட்டால்....உணர்வுகளைப் புரிதலில் நமக்குள் உடன்பாடு ஏர்பட்டால்..குத்துப்பாட்டும், குமட்டும் வசனங்களும் காணாமல் போய்விடும் என்பது உண்மை..


பாலாபிஷேகம் செய்யும் ஓர் ரசிகனாய் இல்லாமல்..பதறுகள் நீக்கும் ஓர் விமர்சகனாய் படங்களைத் தேர்வுசெய்வோம்..ஊடகத் தன்மையின் சிறப்பை உணர்ந்து உலகம் உயர்த்த முயற்ச்சிப்போம்...


வளர்க சினிமா!..................


2 comments:

said...

பார்வை நன்று நண்பரே!

said...

வரவேற்கிறேன் தம்பி அவர்களே!