தேடலும் தேடல் நிமித்தமும்..

Monday, May 18, 2015

நஞ்சின் பிடியில்!




அதிகாலைப் பொழுதின்
யாருமற்ற தனிமையில்
ஒரு துளி
காலத்தைக்
கையில் எடுத்தேன்....

கடந்த காலங்களின்
எச்சங்கள் வழியே
நினைவுகள் புதுபிக்க
நல்லவை தோண்டினேன்

நல்லவை பலவும்
புதையுண்டு இருப்பினும்
கெட்டவை சில துளி
விரவி இருப்பதால்....

நல்லவை இப்போ
நஞ்சின் பிடியில்!

- சண்.சிவா




Thursday, May 14, 2015



Tuesday, October 28, 2014


Friday, October 2, 2009

அந்த வி.ஐ.பி!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்...
பிரிட்டிஷாரின் கட்டிடக் கலைக்கு சான்று சொல்லும் அடையாளங்களில் ஒன்று...

ரயில் நிலையம் ஒரு பிரம்மாண்டம்தான்!
பலதரப்பட்ட மனிதர்கள்,பலதரப்பட்ட மொழிகள்,ரயில் வந்து செல்லும் ஓசை,ரயில் நிலையத்திற்கேயுரிய வாசனை,நீண்டு நெடிந்திருக்கும் ரயில் பெட்டிகள்,எல்லாவற்றிர்க்கும் மேலாக அழுகையாய்,ஆனந்தக் கண்ணீராய்,பிரியா விடையாய்,பிரிய மறுக்கும் இடமாய் என ஒட்டுமொத்தமாய் உணர்வுகளைக் குவித்து பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தும் ரயில் நிலையம் ஒர் பிரம்மாண்டம்தான்...
இந்த பிரம்மாண்டத்தை நான் எப்பொழுதெல்லாம் காண நேர்கிறதோ, அதுவும் சொந்த ஊரில் தாயின் பராமரிப்பில் சில நாட்கள் இருந்துவிட்டு எப்பொழுதெல்லாம் எழும்பூர் ரயில் நிலையம் வரநேர்கிறதோ அப்பொழுதெலாம் என்னுள் ஓர் பயம் ஒட்டிக்கொள்ளும்....

இங்கே உன் தாய் இல்லை,தந்தை இல்லை,உற்றார் உறவினர்கள் இல்லை,கண்டிப்பாய் சுதந்திரம் இல்லை என உறக்கசொல்வது போல் இருக்கும் எழும்பூர் ரயில் நிலையத்தை நான் பார்க்கும் பொழுதுகள்....

சுற்றுலாத் தவிர்த்து,பணி நிமித்தம் நெடுந்தொலைவில் இங்கு வந்து தடம் பதிக்கும் பெரும்பாலோரின் பொழுதுகள்,குறிப்பாக இளைஞர்களின் பொழுதுகள் இப்படித்தானிருக்குமென நினைக்கிறேன்...

தாய் வீடு என்பது உண்மையில் பெரும் பாதுகாப்பு, அதுவும் நெடுந்தூரத்தில் இருந்து வேலைபார்க்கும் இளைஞர்களுக்கு தாய் வீடு செல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அளப்பரியது...

உண்மையில் விவரம் எதுவுமே தெரியாமல் கருவறையில் இருக்கும் பாதுகாப்பை விடவும்,விவரம் தெரிந்தபிறகு தாயின் மடியில் அவ்ர்தம் பார்வைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் பாதுகாப்பு மிக உயர்ந்தது...

உலகையே உருட்டி உண்ணக் கொடுத்தாலும் தாயின் ஒற்றைப் பருக்கைக்கு ஈடாகுமா? ஒற்றை உருண்டையில் உயிரை நீட்டிக்கும் பக்குவத்தை பக்கத்திலிருந்து கலந்து கொடுப்பவள் அல்லவா தாய்!

அத்தகையத் தாயை,தாய் மண்ணைப் பிரிந்து பல்வேறு கனவுகளோடு,இதே எழும்பூர் ரயில் நிலையத்தில் தடம் பதித்தவர்தான் இன்று நான் பார்த்த அந்த வி.ஐ.பி,....

ஆங்கில இலக்கியம் முடிந்த கையோடும், அடுத்த நிலைக்கான கேள்விகளோடும் சென்னையைத் தஞ்சம் அடைத்தவருக்கு வாய்ப்பளித்தது ஒரு சுற்றுலா ஏஜென்சி, சிறப்பான ஆங்கிலப் புலமை,நேர்த்தியான நடை,உடை,பாவனை,ஆளுமை என அனைத்தும் அவரை சிறந்த tourist guide ஆக மக்களிடையே அடையாளப் படுத்தியது,

வேலைக்குத் தகுந்த ஊதியம்,தேவைக்குத் தகுந்த மனைவி, ஆஸ்தி -அஸ்தி கரைப்பதற்காவே இரு குழந்தைகள், என அவரது சென்னை வாழ்க்கை சந்தோசமாய் நகர்ந்தது..

மகனையும் மகளையும் மேல்நிலைக் கல்வி படிக்க வைக்கும் வரை அவருக்கு வேலை பறி போகவில்லைதான்... ஆனால் அதற்கு பிறகு வேலை பறிபோனது.

அந்த கணமே மனைவிக்கு அவ்ர்மீதிருந்த மரியாதையும் போனது.

கிராமத்து அக வாழ்க்கையைக்காட்டிலும் பெரு நகரத்து புற வாழ்க்கையப் பார்த்து பழகியிருப்பார் போலும் அவ்ரது மனைவி..ஒவ்வொரு நாளும் அவ்ரை வெறுத்து ஒதுக்கியிறாள்,

குழந்தைகளும் தாய் சொல்லிற்கு மறுப்பேதும் சொல்லாது தந்தையை தவிர்த்திருக்கிறார்கள்..

வேலையின்மை,மனைவியின் போக்கு,குழந்தையின் கண்டு கொள்ளாமை என எல்லாம் சேர்ந்து அவரை ஒருவித மனச்சிக்கலுக்கு,உளவியல் பாதிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறது.

மனைவியின் இரக்கமில்லா சப்தத்தில் ஓர் நாள் அவர் வீட்டைவிட்டே வெளியேறிவிட்டார்..

வீதிகள் இவர்களுக்காகத்தானேக் காத்திருக்கிறது பிறகென்ன?

நொந்த இதயத்தோடும் ,நொடிந்து போன வாழ்க்கையோடும் நடை போட்டிருக்கிறார்..

மனைவி, குழந்தைகளைப் பிரிந்து 15 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது இப்பொழுது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது கூட அவருக்குத் தெரியாது..

அவர்களுக்கும் இவர் எங்கிருக்கிறார் எனும் எண்ணம் துளியளவேனும் கிடையாது போலும் 15 வருடங்களாக அவர் சார்ந்த ஒருவரும் அவரை சந்திக்க வரவில்லை....

இந்த 15 வருடம் அவர் வாழ்க்கையை எப்படி நகர்த்தியிருப்பார் என்னும் போது என் விழிகள் கலங்கிற்று..

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் எதிர்புறமாக அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில்தான் அந்த வி.ஐ.பி யின் வரலாறு கேட்க நேரிட்டது...

நீண்டு வளர்ந்திருக்கும் வெள்ளைத் தலை முடி, அடர்த்தியான மீசை, சவரம் செய்யப்படாமல் அவரின் அக வாழ்வோடு அவரின் காலத்தின் மதிப்பீட்டையும் சொல்லும் விதமாக வளர்ந்து விரிந்திருக்கும் வெண்தாடி,

முன்பு வெள்ளை நிறத்தில் இருந்திருக்கும் போலும் தற்பொழுது புற உலகின் யதார்த்தம் பூசியிருக்கும் சட்டை, அதை உட்புகுத்தி வெளிரியிருக்கும் பெல்ட், அடர் நீல வர்ணத்தில் பேன்ட், இடது தோள்பட்டையில் ஒரு அழுக்கு மூட்டை, ஒளிவீசும் கண்கள், குழந்தைத் தனமானப் புன்னகை என ஒரு ஞானியைப் போல என் எண்ணங்களில் ஊன்ற ஆரம்பித்தார்...

யாசகம் செய்யும் எத்தனையோ பேரை தினமும் நாம் சந்திக்கிறோம் முடிந்தால் தர்மம் செய்கிறோம் இல்லையேல் "சில்ற இல்லப்பா என தவிர்த்து ஒதுங்குவோம்

ஆனால் இவரோ சுருங்கிய முகமோ, ஏக்கமோ, யாசக வாசகமோ எதுவுமே இல்லாது நேராக நின்று, இரு கரங்களையும் கூப்பி என்னைப் பார்த்து கும்பிட்டு சினேகமான ஒரு புன்னகையை உதிர்த்தார், நானும் பதிலுக்கு புன்னகைத்தேன் மீண்டும் கைகளைக் கூப்பினார்..அதற்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை ஒரு 50 பைசாவை அவரிடம் கொடுத்தேன்....

அதைப் பெற்றுக் கொண்டதும் மீண்டும் இருகரங்களையும் தலைக்குமேல் உயர்த்தி கைகூப்பியவர் சில கும்பிடலுக்குப் பிறகே நகர்ந்தார்...

இடை இடையே குழந்தை தன் தாயிடம் எதேதோ சொல்லிக்கொண்டிருக்குமே அத்தகையதொரு மொழியில் யாரிடமோ,என்னென்னவோ சொல்லிக்கொண்டேயிருக்கிறார்....
ஒரு வேளை தொலைந்து போன மனித நேயம் அவரது விழிகளுக்கு மட்டுமேத் தெரிகிறதோ என்னவோ?
நான் அவரை முழுதுமாக அவதனித்தேன் .....

என்னருகே சக பயணி ஒருவர் இன்னொருவரிடம் கோயம்பேடு செல்வதற்கான பேருந்து வசதி பற்றி கேட்கிறார் அதை உன்னிப்பாய் கவனித்த அவர், அவர்களருகே ஓடிவந்து தெளிவாய் பேருந்து நிறுத்தம், வழித்தடம் குறித்து பேசிவிட்டு நகர்கிறார்.....

ஓர் வயதான அம்மா ஓடிவருகிறார் அந்த மூதாட்டிக்காகப் பேருந்தை மறைத்து பத்திரமாக போங்கம்மா என்பது போல் சைகை காட்டுகிறார்..

என் சிந்தனை முழுதும் அவர் மீதே பதிந்திருந்தது..அவரிடம் பேசவேண்டும் போலிருந்தது எனக்கு..இருப்பினும் கொஞ்சம் பயந்த படியே இருந்தேன்..

மீண்டும் அவர் என்னருகே வரவே ஐயா உங்ககூட கொஞ்சம் பேசனுமே என்றேன்....எங்கிட்ட என்ன சார் பேசப் போறீங்க என்றார்,

எதோ பேச வேண்டும் போல் தோன்றுகிறது என்றேன்..
நான் ஒரு பரதேசி என்றார்....

உங்கள் பெயர் என்ன என்றேன்?
ஒருகணம் என்னை உற்றுப் பார்த்துவிட்டு
ராஜ திருஞான சம்பந்தம் என்றார்..

அழகான பெயர் ஞானம் உங்கள் பெயரோடு மட்டுமல்ல உங்களிடமும் சம்பந்தப்பட்டுள்ளது என்றேன்..
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஆனால் நான் அதைக் கடந்து விட்டதாய் உணர்கிறேன் என்றார்...

தியானம் செய்வீர்களா என்றேன்,,,
தியானம் போன்றது என் வாழ்வு என்றார்...

உங்க ஊர் ஐயா?
தஞ்சா ஊருக்கு அருகில்...

சார் 1978ல நா இங்கே வந்தேன் ..பி ஏ ஆங்கில இலக்கியம் முடித்து இங்கே வந்து...என தனது வாழ்க்கைப் பதிவுகளை என்னிடம் பகிர்ந்து
கொண்டவரிடம்

ஐயா புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டா?என்றேன்
YOU KNOW IAM A BOOK WARM!
நா நிறைய புத்தகங்கள் படிச்சிருக்கேன்....
சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறார்...

ஐயா இவ்வளவு படிச்சிருக்கீங்க மீண்டும் ஏதேனும் வேலையில் சேர்ந்திருக்கலாமே என்றேன்..
சில கம்பேனிகளுக்கு முயன்றேன் பலனில்லை பிறகு இந்த வாழ்க்கை எனக்குப் பழகி நிரந்தரமாயிற்று என்றார்..

ஏதேதோ சைகை காட்டி சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே அப்படி என்னதான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்றேன்..
அது.....!உங்கள மாதிரி காசு கொடுக்குறவங்களை thanks சொல்லி வாழ்த்துவேன்....என்னையறியாமல் அவர் இவ்வளவு கொடுத்தாரு ,இவர் அவ்வளவு கொடுத்தாருன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன்....

எப்பவுமே வீதிகளில்தான் தங்குவீர்களா என்றேன்..
அப்படித்தான் தங்கியிருந்தேன் ஆனால் உங்களைப் போல் ஒருத்தர் ஒருநாள் எங்கிட்ட பேசினாரு அவருதான் அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே இரவுமட்டும் தங்க அனுமதி கொடுத்திருக்காரு அங்கதான் தங்குவேன் என்றார்..

10 நாளைக்கு ஒரு முறை குளிப்பேன்,
காலையில் சாப்பிட மாட்டேன்,
மதியம் கொஞ்சமா சாப்பிடுவேன், இரவு நினைத்தால் சாப்பிடுவேன் இல்லையேல் விட்டு விடுவேன்...என்றார்

சரி வாங்க ஐயா நாம ரெண்டுபேரும் சாப்பிடலாம் என அழைத்தேன்..
இல்ல சார் வேணாம் சார் காலையில சாப்டமாட்டேன் என்றார்..
எனக்காக வாங்க என்றேன்..
இல்ல நீங்க பேசினது சந்தோசம் என்றார்...

சரி வாங்க 100 ரூபாயா எங்கிட்ட இருக்கு சில்லறை மாத்திக் கொடுக்கிறேன் என்றேன் மறுத்துவிட்டார்...(நான் வளர்ந்து வரும் சினிமா நடிகன் எனது பொருளாதார்ம் அன்று 100 ரூபாய்க்கு உட்பட்டே இருந்தது)

பிறகு என்னிடம் இருந்த சில்லறைகளை மொத்தமாய் அவரிடம் கொடுக்கமுற்பட்டேன் முதலில் வாங்க மறுத்தவர் பிறகு வாங்கிக் கொண்டார்...

மீண்டும் ஒருமுறை கைதூக்கி கும்பிட்டு உளர ஆரம்பித்தார் நான் அவரை உணர ஆரம்பித்தேன்....

பெரும்பாலான ஞானிகளை இந்த உலகம் பைத்தியக்காரர்களாய்த்தான் பார்க்கிறது..ஆனால் ஓசோ போன்றவர்கள் பைத்தியத்தனம்தான் ஞானிகளின் அடையாளம் என்கிறார்கள்....
உலகைத் துறந்தவன் துறவி உலகை உணர்ந்தவன் ஞானி...
புற மதிப்பீடுகளுக்கு மட்டுமே பழக்கப்பட்டுவரும் இவ்வுலகத்தால் அகம் சார்ந்த அளவீடுகளை அறிய முடியவில்லை.....
புறம் என்பது வெறும் மாயைதான் என்பதைக்கூடபுறம் நம்மை ஒதுக்கித்தள்ளும் பொழுதுகள்தான் உணர்த்துகிறது...
புறத்தை அழகுபடுத்தத் தெரிந்த நமக்கு அகத்தை அழகுபடுத்த தெரியவில்லை....
அல்லது அகம் என்பதையே அறியவில்லை.....

மனிதம் சுறுங்கி மானுடத்துயர் அதிகரிக்கும் நாட்களில் கடவுள் அவதரிப்பார் என்கிறார்கள்...
கடவுள் அல்ல புற மதிப்பீடுகளால் ஒதுக்கப்பட்ட நம் வி.ஐ.பி திரு ரஜ திருஞானம் ஐயா போன்று பல மகான்கள் அவதரிக்கக்கூடும்...அன்று புறம் முற்றிலுமாய் தன் சுயத்தை இழக்கும்.....

(தினமும் காலையில் 7 மணிமுதல் 10 மணிவரை அவரை எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பாக பார்க்காலாமாம்...நானும் அவரை இன்னொரு முறை சந்திப்பேன்....)


Sunday, August 23, 2009

போதி

அவனது கடைசி இரவு அது, அதோ காத்திருக்கிறதே ஒரு விஷ பாட்டில் அது அவனுக்காகத்தான்...

இன்னும் சிறிது நேரத்தில் அவன் மரிக்கக் கூடும்,அது நடந்தே தீரும்...
பாவம் நீந்தியே பழக்கம் இல்லாதவனுக்கு ,எதிர் நீச்சல் எப்படி சாத்தியமாகும்? காணும் இடமெல்லாம் இருளே சூழ்ந்து கிடப்பதாலும்,அப்படித்தான் அவன் நம்புவதாலும் வெளிச்சம் விரிக்க வேண்டிய வயதில் விதியை சுருக்க முற்படுகிறான்.

இன்னும் சிறிது நேரத்தில் மரணத்தை நிகழ்த்தியே தீருவேன் என்றபடி இருக்கிறது விஷப் பாட்டில் மீது விரவியிருக்கும் அவ்னது பார்வை...
இருப்பினும் தன் மரணத்தின் ஒவ்வொரு நொடியையும் கவனமாய் செலவழிக்கிறான்,

அதோ ஒரு நொடி திடீரென மழைத்துளிகளைப் பிரசவித்து அவனது மரணத்தை பல நொடிகள் ஒத்திவைக்க செய்கிறது,.எத்தனையோ தடவை மழை பார்த்திருக்கிறான்..ஆனால் இன்று மட்டும் ஏனோ அவனுக்குள் அப்படியோர் தவிப்பு.,மழை வரும் பொழுதுகளை எல்லாம் அவன் விடும் கண்ணீர் பொழுதுகளாய் ஆக்கியதின் விளைவு அது.
தன் மரணுத்துக்கு முந்திய கடைசி நொடிகளில் அவந்தான் கேட்கிறான்,மழை இத்தனை அழகானதா?முதன் முதலாய் வியக்க ஆரம்பிக்கிறான்...பாவம்! ரசிப்பதற்கும் சிந்திப்பதற்கும் தெரிந்திருந்தால் அவன் ஏன் விஷப்பாட்டில் எடுத்திருக்க வேண்டும்?ஒட்டுமொத்த உலகத்தையும் இன்றுதான் உற்று நோக்குகிறான் அல்லது உணர்கிறான்..

நீண்டு நெடிந்திருக்கும் அந்த நகரத்து வீதியில் அவனது விழிகள் விரிகிறது, அதோ! வற்றிப்போன மார்பை சுவைத்துக்கொண்டிருக்கும் ஓர் platform தாயின் குழந்தை என்னமாய் சிரிக்கிறது?

அட! என் வயதை ஒத்தவர்கள்தான் இந்த குப்பை அள்ளுபவர்கள் கும்மியடித்துக்கொண்டே எத்தனை அழகாய் குப்பை அகற்றுகிறார்கள்?

அதோ கூர்கா தயாராகிறான் பாஷை தெரியா பாடலை முனுமுனுத்துக்கொண்டே,பாஷை தெரியாவிடினும் அவ்ன் சந்தோசம் என்னையும் அல்லவா ஏங்க வைக்கிறது?

இரவு இத்தனை ரம்மியமானதா?ஒளிர்ந்து கிடக்கும் விளக்குகளையும்,தெளிந்து கிடக்கும் வானத்தையும் நோக்குகிறான்,வெளிச்சம் இருக்கத்தானே செய்கிறது என்பது போல் மனதைக் கேட்கிறான்...

விஷப்பாட்டில் ஏமாற்றிவிடுவானோ என்னுமொரு கோணத்தில் அவனை பயமுறுத்துகிறது அல்லது மீண்டும் அவனது மரண நொடிகளை ஞாபகப் படுத்திற்று...

தன் தாயை நினைத்துப் பார்க்கிறான்..அம்மா...அம்மா...அம்மா....உன் தாலியை விடுத்து எனக்கு கல்வியைக் கொடுத்தாய்,உன் காய்ந்த வயிறுக்கு நான் ஏதம்மா கொடுத்தேன்?
நான் என்ன செய்வேன்?என்னால் முடியாது போயிற்றே நான் இருந்தும் என்ன பயன்?
இதோ!உன் மகன் இறக்கப் போகிறேன் ஒட்டு மொத்தமாய் ஒரு நிம்மதிக்காக இறக்கப் போகிறேன்.
நினைத்து நினைத்து நெஞ்சம் குமுறுகிறான்...அவனது இயலாமை மீண்டும் இயங்கத்தொடங்கிற்று...ஆவேசம் வந்தவனாய் விஷப்பாட்டில் எடுக்கிறான்,கண்ணைமூடி ஒரே மடக்கில் குடித்துவிட ஆயத்தமாகிறான்.....கண்களை மூடுகிறான் ,முடியவில்லை கை நடுங்கிற்று,அம்மாவின் முகம் வந்து வந்து போகிறது..... அம்மா..அம்மா....அம்மா...அழத்தொடங்குகிறான்...அம்மாவின் குரலையாவது கேட்டுவிடமாட்டோமா என அவசியப்படுகிறான்.......சில நொடிகள் தள்ளிப் போகிறது...

விஷப்பாட்டில் மட்டும் Waiting.....

அம்மாவைப் பற்றிய தாகம் அதிகரிக்க,அதிகரிக்க.....அவசர அவசரமாக ஓர் தொலைபேசி நிலையத்தை அடைகிறான்....எண்களை சுழற்றுகிறான்,பக்கத்து வீட்டு அக்காவிடம் சொல்லி அம்மாவை அழைத்துவர சொல்கிறான்,சிறிது நேரத்திலேயே எய்யா ராசா எனும் ஏக்கத்தோடு எதிர்முனையில் அம்மாவின் குரல்...
கேட்ட மாத்திரத்திலேயே அவன் நெஞ்சு அடைக்கிறது,விழிகள் வெடிக்கிறது...
எதிர் முனையில் மட்டும் ஒரு ஏக்கத்தவிப்பு விட்டு விட்டு ஒலிக்கிறது....

பேச நா எழவில்லை...ரிசீவரை வைத்துவிட்டு விம்மியபடியே கடைகாரரை நெருங்குகிறான்...

கடை காரரும் வருந்தியபடியே ,என்ன சார்?ஏன் சார் அழுறீங்க?கவல படாதீங்க சார் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்...உங்க கண்ணீரை நான் உணர்கிறேன் அழாதீங்க சார் அழாதீங்க என்கிறார்...

யோ! கண்ணுனு இருந்தா அழுக வரத்தான் செய்யும்,அதுலான் உனக்கு இப்ப எதுக்கு இந்தா என 10 ரூபா நோட்டை எரிச்சலோடு நீட்டுகிறான்,
கடைகாரர் அதை நிதானமாக வாங்கி விரல்களால் விட்டமளக்கிறார்...

என்ன சார்? நல்ல நோட்டா கள்ள நோட்டானு பாக்குறீங்களா?நல்ல நோட்டுதான் என மீண்டும் எரிந்துவிழுகிறான்...

சற்று நிதானத்துடன் கடை காரர் தொடர்கிறார் ஏன் சார்? ஏன் எதுக்கெடுத்தாலும் விரக்தியில பேசுறீங்க?நீங்க கொடுக்குற இந்த காசுதான் ஏதோ ஒரு விதத்துல என் அம்மாவுக்கும்,சகோதரிக்கும் சந்தோசத்தக் கொடுக்குது எனக்கான கடமை இது சார்...

அப்புறம் என்ன சொன்னீங்க?கண்ணுனு இருந்தா அழுக வருமா?கண்ணு இல்லாட்டியும் கூட அழுக வரும் சார்,மெதுவாக தன் கண்ணாடியை கழற்றுகிறார்...அங்கே விழிகள் இல்லாது இரு குழிகள் மட்டுமே இருளை அப்பியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுறுகிறான்...
என்ன சார் பேசாம நிக்குறீங்க?.....நா பிறவிக் குருடன்....இருந்தாலும் எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு,என்னிக்குமே அத தவிக்க விட்டதில்ல..உங்களுக்கு என்ன சோகமோ எனக்குத் தெரியாது,ஆனா சோகம் என்பது நிரந்தரமல்ல அத மட்டும் புரிஞ்சுக்கோங்க...விழி என்பது எனக்கான குறை பாடு மட்டுமே அத என்னிக்குமே சோகமாகவோ,சுமையாகவோ நா நினைச்சதில்ல......இந்தாங்க மீதி சில்லறை என தெளிவாய் எண்ணிக் கொடுக்கிறார்....நா ஏதாவது தப்பா பேசியிருந்தா என்ன மன்னிச்சி....அதற்குள் அவர் கரங்களைப் பற்றி நீங்கதான் சார் என்ன மன்னிக்கனும்,..இவ்வளவு நாளும் கண் இருந்தும் இருட்ட மட்டுந்தான் பழக்கப்படுத்தி வந்திருக்கேன்...ஆனா நீங்களோ வெளிச்சம்கிறது புறம் மட்டுமல்ல அகத்தையும் சார்ந்ததுனு புரிய வச்சிட்டீங்க....எனக்குள்ளும் இப்போ வெளிச்சம் கிடச்சாச்சு...என் போதியே உங்களை வணங்குகிறேன்..நிறைந்த மனதோடு வெளியில் வருகிறான்...வானத்தில் ஒரு வளர்பிறை தன் பெளர்ணமிக்கான பயணத்தை தொடர்வதைப் பார்த்துக் கொண்டே நடக்கிறான்......தூரத்தில் எங்கோ விஷப்பாட்டில் உடையும் சப்தம் கேட்கிறது.


Friday, May 22, 2009

உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......

FACT FILE : A MUST READ !!!!
உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.
1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் ( Michael O'Dwyer ) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.
இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer ) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான்.. ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.
துவள வில்லை உதம் சிங் , அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து ( Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்

மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400 ௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.
பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர் , ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள் .
சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்............ .....
400 ௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்......
ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400 ௦௦ பொது மக்களை மற்றும் 800 ௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா ?
? ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது ? - மகாத்மா காந்தி
400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால் .....
அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.
பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா ?
அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா ?
நல்ல நியாம்டா சாமி............ . .
சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு , இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......
ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....

'' ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன் , யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன் , விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.
ஆனால் ரன்பீர் சிங்கோ , ' இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால் , நமக்குள் எந்த உறவும் இருக்காது ' என்று சொல்ல...
யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்! ''
ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன் ?
ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது............ ....
மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்............. ........

1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh . அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.
இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!
இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...
பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா ? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன் ?
அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே ?
சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...
அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும் ( ஒற்றை கண் சிவராசன் ? உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன் ?
இந்த வழக்கில் மேலும் நளினி , பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன் ?
இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன் ? ??
இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)
ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!
எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள் ?
இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது , தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்.........
அட நாய்களே.....
நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை ?.. இந்தியனாக இருக்க தேவை இல்லை ?.. தமிழனாகவோ இருக்க தேவை இல்லை
மனிதனாக இருந்தால் போதும்.....
இப்படிக்கு ,
மனிதர்
தமிழர்
இந்தியர் ...

Thanks Mr vasanth.


Thursday, May 21, 2009

ராஜ பக்சே மரணம்????????????!!!!!!!!!!!!!!!!


நன்றி thamilthenral.blogspot.com......
பார்த்து மகிழுங்கள் இப் பன்னாடையின் அழிவை........